செய்திகள்

வேப்பம்பட்டில் 2 குழந்தைகளுடன் ரெயில் முன்பாய்ந்து பெண் தற்கொலை

வேப்பம்பட்டில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுடன் பெண் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இலக்கியா (3), ஸ்ரீஜா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

லட்சுமணனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இன்று காலையிலும் அவர்களுக்கு இடையே தகராறு நீடித்தது.

இதனால் மனவேதனை அடைந்த சரஸ்வதி தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் சரஸ்வதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரெயில் வந்தது.


விரக்தியில் இருந்த சரஸ்வதி திடீரென்று தனது 2 குழந்தைகளுடன் ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் சரஸ்வதியும் அவரது 2 குழந்தைகளும் உடல் சிதறி பலியானார்கள்.