செய்திகள்

வேப்பேரியில் பிளஸ்-1 மாணவியை மிரட்டி கற்பழித்த வாலிபர் கைது

வேப்பேரியில் பிளஸ்-1 மாணவியை மிரட்டி கற்பழித்த வாலிபரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னையை சேர்ந்தவர் பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ்-1 மாணவியான இவரது தந்தை கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மூத்த சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் பிரேமா தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாரி என்ற வாலிபர் மாணவி பிரேமாவை கடந்த மாதம் மிரட்டி கற்பழித்தார். அதன் பின்னர் கடந்த 5 மாதங்களாக பிரேமாவை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பிரேமா கர்ப்பம் அடைந்தார். இது தெரியாமலேயே பிரேமா பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளியில் நடன போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரேமாவுக்கு திடீரென வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடுமையாக அவதிப்பட்டார். ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரேமா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரேமா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதுபற்றி வேப்பேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் பிரேமா கர்ப்பமாவதற்கு மாரி காரணமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாரியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.