செய்திகள்

மறைந்த கர்நாடக பாடகி டி.கே.பட்டம்மாளுக்கு துணை ஜனாதிபதி புகழாரம்

சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மறைந்த கர்நாடக பாடகி டி.கே.பட்டம்மாளின் இசை சேவைக்கு புகழாரம் சூட்டினார். #venkaiahnaidu #dkpattammal

மாலை மலர்

சென்னை:

சென்னையில் இசைக்கலைஞர் பட்டம்மாள் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

டி.கே.பட்டம்மாள் கர்நாடக இசை உலகில் முடிசூடா அரசியாக விளங்கினார்.  இந்தியா சுதந்திரம் அடையும் நேரத்தில் தேசப்பற்று மிக்க பல்வேறு பாடல்களை பாடியவர். தேசிய கவி சுப்ரமணிய பாரதியாரின் பாரத சமுதாயம் வாழ்கவே என்ற பாடல் அனைத்து தரப்பினரையும் ஈர்த்த பாடலாகும்.

தாய் மொழி என்பது கண் போன்றது பிற மொழிகள் கண் கண்ணாடி போன்றது. அனைவரும் தாய்மொழி மீது பற்றுக் கொள்ள வேண்டும். ஆனாலும், பிற மொழிகளைக் கற்பதில் தவறில்லை என தெரிவித்தார்.

மேலும், முறையான இசை பயிற்சி ஏதும் இல்லாமல் தனது 10-வது வயதில் அகில இந்திய வானொலியில் கர்நாடக இசைப்பாடகியாக அறிமுகமான டி.கே.பட்டம்மாள் 13-வது வயதில் மதராஸ் ரசிக ரஞ்சனி சபாவில் முதன் முறையாக இசை நிகழ்ச்சி நடத்தியதையும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சுட்டிக்காட்டினார். #venkaiahnaidu #dkpattammal #tamilnews