புதுச்சேரி:
புதுவை சாரம் ராஜா நகரை சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 45). பெயிண்டர். இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஜெரால்டு வேல்ராம்பட்டில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டார்.
பின்னர் மதியம் வீட்டின் கீழ் தளத்தில் சாப்பிட்டு விட்டு மேல் தளத்துக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெரால்டு மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஜெரால்டு பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.