கைது 
செய்திகள்

வேலாயுதம்பாளயம் அருகே மது விற்ற வாலிபர் கைது

வேலாயுதம்பாளயம் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளயம் அருகே உள்ள காகிதபுரம் மூலிமங்கலம் பகுதியில் மது விற்கப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூலிமங்கலம் பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள முட்புதரில், மது விற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஆதிரை மேல்பனையூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT