தற்கொலை 
செய்திகள்

வேலகவுண்டம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலச்சிபாளையம்:

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள ஆலாங்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுவேல் (வயது 55). தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவர் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.