விபத்து 
செய்திகள்

முத்துப்பேட்டை அருகே வாகனம் மோதி மீனவர் பலி

முத்துப்பேட்டை அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மீனவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் பகுதி காத்தாடி கொல்லையை சேர்ந்தவர் கந்தசாமி (வயது45). மீனவர். இவர் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்காக சைக்கிளில் கடற்கரை நோக்கி சென்றுள்ளர்.

அப்போது ஆலங்காடு என்ற இடத்தில் அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமி மீது மோதிவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.