செய்திகள்

தேவதானப்பட்டி அருகே வாகனம் மோதி கல்லூரி காவலாளி பலி

தேவதானப்பட்டி அருகே சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி காவலாளி பலியானார்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் ராஜூ. (வயது 55). இவர் அரசு தோட்டக்கலைக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இவர் தினசரி பணிக்கு சைக்கிளில் வருவது உண்டு. அதன்படி நேற்று இரவு சைக்கிளில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். கல்லூரியின் கிழக்கு வாசல் பகுதி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ராஜூ சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews