செய்திகள்

வறட்சி, தண்ணீர் பற்றாக்குறையால் காய்கறி விலை உயர்வு

வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை எதிரொலியாக காய்கறி விலை ‘கிடுகிடு’ என உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வறட்சி, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. மார்க்கெட்டுகளுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறி, பழங்கள் தினமும் 400 லாரிகளில் வருவது உண்டு. தற்போது காய்கறிகள் வரத்து ஒருவாரமாக குறைந்துள்ளது.

கத்தரிக்காய், வெங்காயம், பீன்ஸ், தக்காளி, உருளை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வு வருமாறு:-

இது குறித்து காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

பருவ மழை பொய்த்ததாலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் காய்கறிகள் உற்பத்தி குறைந்துள்ளது. கிராமங்களில் பம்பு செட் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்த்து காய்கறிகள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் உற்பத்தி செலவு அதிகமாகிறது. அதன் காரணமாக காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

நமது தேவைக்கு ஏற்ப காய்கறி லாரிகள் போதுமான அளவு வரவில்லை. இதனால் காய்கறிகள் விலை அதிகமாகி உள்ளது. பருவ மழை பெய்து, வறட்சி நீங்கும்வரை காய்கறிகள் விலை குறையாது.

இவ்வாறு அவர் கூறினார்.