தற்கொலை 
செய்திகள்

வீரவநல்லூர் அருகே வாலிபர் தற்கொலை

வீரவநல்லூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நெல்லை:

வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி (வயது27), கூலித்தொழிலாளி. இவர் தினசரி மது குடித்து விட்டு வந்ததால் இவரது மனைவி கண்டித்தார்.

இதில் மனமுடைந்த இசக்கி நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.