பெங்களூரு :
முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தெலுங்கானா மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நரசிம்மராவ் பிரதமராக பதவி ஏற்றபோது, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. அவரது மந்திரிசபையில் நிதி மந்திரியாக பணியாற்றிய மன்மோகன்சிங் மற்றும் நரசிம்மராவ் ஆகியோர் சேர்ந்து பொருளாதாரத்தை மீட்டெடுத்தனர். இதற்கான நற்பெயர் அவர்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டும். அதனால் அவர்கள் 2 பேருக்கும் பாரத ரத்னா விருது வழங்கினால் நன்றாக இருக்கும். மன்மோகன்சிங், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர்.
இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.