செய்திகள்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி மரணம்

சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி ரங்கநாயகி இன்று காலை காலமானார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளரும், வேளாண்மைத்துறை முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி ரங்கநாயகி இன்று காலை காலமானார் அவருக்கு வயது 78.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலை இறந்தார்.

அவருக்கு வீரபாண்டி ஆ. ராஜா என்ற மகனும், மகள்களும் உள்ளனர். வீரபாண்டி ஆ. ராஜா சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக உள்ளார். #tamilnews