செய்திகள்

வீரபாண்டி ஆறுமுகம் சொத்துகுவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

வீரபாண்டி ஆறுமுகம் சொத்துகுவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் மரணம் அடைந்தார்.

முன்னதாக அவர் மீது தமிழகஅரசு சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது. விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது வீரபாண்டி ஆறுமுகம் இறந்ததால் அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்து உத்தரவிட்டது.

இதை அடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம் தவிர அவரது குடும்பத்தினரின் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT