பெண் பலி 
செய்திகள்

வேடசந்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

வேடசந்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேடசந்தூர் அருகே உள்ள வெல்லம்பட்டியை சேர்ந்தவர் பரமேஷ். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 47). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்பு, ஈஸ்வரியை கடித்தது. இதனால் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு, வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஈஸ்வரி ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.