மது பாட்டில்கள் திருட்டு 
செய்திகள்

வேடசந்தூரில் கோர்ட்டில் புகுந்து மது பாட்டில்கள் திருட்டு

வேடசந்தூரில் கோர்ட்டில் புகுந்து மது பாட்டில்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது விற்ற சிலரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களை மது பாட்டில்களுடன் வேசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் கோர்ட்டில் ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்தன.

சம்பவத்தன்று இந்த பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் அறை கதவை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றனர். மறு நாள் இதை பார்த்த கோர்டடு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.