விடுதலை சிறுத்தை கட்சி 
செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மரியநாதபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோக்கஸ் வளவன் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில துணை செயலாளர் திருச்சித்தன், நில மீட்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சவரி அம்மாள், ஆட்டோ தொழிலாளர்கள் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் தேவா, நகர துணை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.