செய்திகள்

லஞ்சப்புகாரில் கைதான கோவை பல்கலை. துணை வேந்தர் கணபதி சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கியதாக கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றிய கணபதி, பேராசிரியர் நியமனத்திற்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வீடு, பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

கணபதி கைதை அடுத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்த கைது சம்பவத்தில் துணை வேந்தர் கணபதியை பணியிட நீக்கம் செய்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.