நெல்லை:
2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி டிராகன்ஸ் 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் ரஹில் ஷா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் விளையாடிய திருவள்ளூர் வீரன்ஸ் 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து 31 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.
திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் அதிகபட்சமாக சித்தார்த் 37(27) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபாரஜித் 28 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.