செய்திகள்

வத்திராயிருப்பு பகுதியில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

வத்திராயிருப்பு பகுதி கிராமங்களில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் சாலை அமைக்கும்பணியை சந்திரபிரபா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டி, சேசபுரம், கிறிஸ்தியான்பேட்டை, பாலசுப்பிரமணியர் கோவில் ஆகிய பகுதிகளுக்கு சுமார் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட நீர்தேக்கத்தொட்டி, குளியல்தொட்டி ஆகியவை கட்டப்படுகின்றன. மேலும் அலங்கார கற்கள் பதித்த சாலை, மயானத்திற்கு சிமெண்டு ரோடு ஆகிய பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன. இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

சந்திரபிரபா எம்.எல்.ஏ. அந்தந்த பகுதிகளுக்கு சென்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் வசதி கருதி விரைவில் பணிகள் நடைபெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வ.புதுப்பட்டி செயல் அலுவலர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, வக்கீல் ராஜா, பிச்சைராஜ், மணி, கணேசன், நெல்லையப்பன், ரவி அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews