செய்திகள்

வத்திராயிருப்பில் 2 வயது மகளுடன் இளம்பெண் மாயம்

வத்திராயிருப்பில் 2 வயது மகளுடன் இளம்பெண் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு ரோட்டடி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35) லாரி டிரைவர். இவரது மனைவி மீனா (25).

இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. ஜெய அருண்பாண்டி (6), ‌ஷகீதா (2) என 2 குழந்தைகள் உள்ளனர். ஜெய அருண்பாண்டி தனது அத்தை வீட்டில் இருந்து பள்ளி சென்று வருகிறார்.

இதனால் முருகன், மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்குச் சென்று விட்டு முருகன் வீடு திரும்பியபோது, மனைவி-மகள் அங்கு இல்லை. கடைக்குச் சென்று இருப்பார்கள் என முருகன் நினைத்ததால் தேடவில்லை.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் பல இடங்களிலும் முருகன் தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து வத்ராயிருப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.