செய்திகள்

வாஸ்கோ டா காமா - பாட்னா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து - 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

வாஸ்கோ டா காமா - பாட்னா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு 3 பேர் பலியான வழக்கு தொடர்பாக 3 ரெயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாண்டா மாவட்டத்திற்கு அருகே மனிக்பூர் ரெயில் நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை வாஸ்கோ டா காமா - பாட்னா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து நிகழ்ந்து நான்கு நாட்களுக்கு பிறகு விபத்து தொடர்பாக 3 ரெயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இன்ஜினியர், மேற்பார்வையாளர் மற்றும் தண்டவாளத்தை சரி செய்பவர் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.