கண்டமனூர்:
வருசநாடு போலீசார் வைகைநகர் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் 50 மதுபாட்டில்களை கடத்திச்சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில், பிடிபட்டவர் கடமலைக்குண்டு அருகே உள்ள பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பசும்பொன் என்பதும், விற்பனை செய்வதற்காக மதுபானம் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து பசும்பொன்னை போலீசார் கைது செய்து, அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.