செய்திகள்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்- அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி நடைபெற்ற வருண யாகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

மாலை மலர்

கடலூர்:

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வருண யாகம் நடைபெற்றது.

இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு பக்தியுடன் சாமி கும்பிட்டார். முன்னதாக பாடலீஸ்வருக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் குடத்தில் வைத்து இருந்த புனித நீரை ஊர்வலமாக கொண்டு சென்று பாடலீஸ்வரருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.