செய்திகள்

அரசியல் சிஸ்டம் மாறாவிட்டால் எதுவுமே மாறாது - வருண் காந்தி ஆதங்கம்

கோயம்புத்தூரில் நடைபெற்ற இளைஞர் கருத்தரங்கில் லோக்சபா எம்.பி. வருண் காந்தி பேசுகையில், அரசியல் சிஸ்டம் மாறாவிட்டால் எதுவுமே மாறாது என குறிப்பிட்டுள்ளார்.

மாலை மலர்

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற இளைஞர் கருத்தரங்கில் பா.ஜ.க.வை சேர்ந்த வருண் காந்தி எம்.பி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் கல்லூரிகள் செயல்பட வேண்டும். புத்தகங்களை தாண்டி இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. பாதுகாப்பு துறை மந்திரியாக இப்போது தான் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் 11 சதவீத பெண்களும், மாநில சட்டசபைகளில் 9 சதவீத பெண்களும் இடம் பெற்றுள்ளனர். 1950-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டில் 6 பெண் நீதிபதிகளே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

அரசியல் சிஸ்டம் மாறாவிட்டால் எதுவுமே மாறாது. இதற்கு தீர்வு காண வேண்டிய கடமை இளைஞர்களின் கையில் உள்ளது என தெரிவித்துள்ளார். #tamilnews