முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் உள்பட நேரில் சென்று விசாரித்து வந்தனர்.
இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வாஜ்பாயின் உடல் அவரது டெல்லி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தி, தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.