கோவை:
ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ம் தேதி அகில இந்திய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதேபோல் ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் மே 30-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வணிகர் சங்கமும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கிறது. ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து வரும் 30-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒரே நாளில் மூன்று முக்கிய சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளதால் அத்யாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.