கைது 
செய்திகள்

வானகரத்தில் மீன் வியாபாரியிடம் பணம் பறிப்பு- ரவுடி கைது

வானகரத்தில் மீன் வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

மதுரவாயல் அடுத்த வானகரம் மீன் மார்க் கெட்டில் கடை நடத்தி வருபவர் வெங்கடேசன். இன்று அதிகாலை அவரது கடைக்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி வெங்கடேசனை சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.12 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றான்.

இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட மதுரவாயல் கங்கையம்மன் நகரைச் சேர்ந்த ரவுடியான அசோக்குமரை கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

SCROLL FOR NEXT