செய்திகள்

திருமங்கலம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து வாலிபர் பலி

திருமங்கலம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பேரையூர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முருகன் (வயது19). இவர் பரவை மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி.

இன்று காலை ஊரில் இருந்து பரவைக்கு சரக்கு வேனில் முருகன் சென்றார். திடியன் அருகே உள்ள பாலூத்துப்பட்டி வளைவில் வேன் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பின்னால் அமர்ந்திருந்த முருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிந்துபட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.