விபத்து 
செய்திகள்

குரிசிலாப்பட்டு அருகே வேன் கவிழ்ந்து போலீஸ் ஏட்டு உள்பட 14 பேர் காயம்

குரிசிலாப்பட்டு அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் போலீஸ் ஏட்டு உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாலை மலர்

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 41). இவர் சென்னையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர், தனது குடும்பத்தினர் 14 பேருடன் காட்பாடியில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் மயில்பாறை என்ற இடத்துக்கு சாமி தரிசனம் செய்ய ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர்.

சாமி தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல புறப்பட்டனர். வேனை பாலாஜியின் மாமனார் மணி (வயது 60) ஓட்டி உள்ளார். நேற்று மாலை மயில்பாறை கிராமத்தில் புறப்பட்ட சிறிது தூரத்திலேயே வேன் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் போலீஸ் ஏட்டுவின் கை முறிந்தது. வேனில் பயணம் செய்த அனைவரும் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.