வல்லம்:
வல்லம் வெள்ளாளத்தெருவை சேர்ந்தவர் மணிவேல் (வயது55). இவருடைய மனைவி மகாலட்சுமி(30). மணிவேலு தந்தை ஆறுமுகம், தாய் மூக்காயி, தம்பி காசிநாதன்.
மணிவேலுக்கும், அவரது தந்தை மற்றும் தம்பி ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மணிவேல் வீட்டிற்கு வந்த 3 பேரும் உருட்டுக்கட்டையால் அவரையும், மகாலட்சுமியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுபற்றி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை கைது செய்தனர்.