போரூர்:
வளசரவாக்கம் வேலன் நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர். இவர் கடந்த 2 நாட்களாக வீட்டை பூட்டிவிட்டு சைதாப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மாலை திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.
இதேபோல் அதே பகுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றவர்களின் மேலும் 4 பேரின் வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.