ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் என லட்சக்கணக்கில் பலரும் வந்து செல்வது வழக்கம்.
இதற்கிடையே, வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 50,000 -ஐ நெருங்கி விட்டது.
இதையடுத்து, வைஷ்ணவி தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அதிகாரிகள் கூறுகையில், வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதைத்தொடர்ந்து, நாளை காலை 5 மணி வரை யாத்திரை நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.