சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து 
செய்திகள்

சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன் - ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து டுவீட்

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில்கவிஞர் வைரமுத்து இன்று காலை சந்தித்துப் பேசினார்.

மாலை மலர்

சென்னை:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து தற்போது அவர் வெளியே உள்ளார். 

இந்நிலையில், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் இல்லத்திற்கு கவிஞர் வைரமுத்து இன்று காலை சென்றார். அவர் ப.சிதம்பரத்தை  சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று காலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன், சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன் என பதிவிட்டுள்ளார்.