வைகோ 
செய்திகள்

விக்கிரவாண்டி - நாங்குநேரி தொகுதிகளில் வைகோ 2 நாள் பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

மாலை மலர்

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்கிறார்.

இன்று அவர் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் நேமூர், பனமலை, கெடார், விக்கிரவாண்டி, ராதாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.