செய்திகள்

பேராசிரியர் ஜெயராமன் கைது - வைகோ கண்டனம்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நடவடிக்கைகளை எதிர்த்து வாக்குவாதம் செய்த பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். #Vaiko

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேளாண் நிலங்களை, விவசாயிகளை பாதுகாக்கும் அறப்போரில் தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசுக்கு குற்றேவல் புரியும் எடுபிடி அரசாக செயல்படும் தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசு, பேராசிரியர் ஜெயராமன் போன்றோரைக் கைது செய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்துள்ளது.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நடவடிக்கைகளை எதிர்த்து வாக்குவாதம் செய்த பேராசிரியர் ஜெயராமனையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்த காவல்துறையின் அடக்குமுறைக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

பேராசிரியர் ஜெயராமனையும், அவரது குடும்பத்தினரையும், அவருடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Vaiko

SCROLL FOR NEXT