செய்திகள்

ம.தி.மு.க. மாநில சுயாட்சி மாநாடு ஒத்திவைப்பு: வைகோ அறிவிப்பு

‘நவம்பர் 20-ந் தேதி அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ம.தி.மு.க. மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சென்னை:

கல்வி, வரி உள்பட மாநில அரசுகளின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசின் கையில் சென்று வருகிறது. இதனை எதிர்க்கும் விதமாக ம.தி.மு.க. சார்பில் வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறும் என்று வைகோ அறிவித்தார்.

இந்த மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசியல் கட்சி தலைவர்களை வைகோ நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்தநிலையில் ம.தி.மு.க. மாநில சுயாட்சி மாநாடு திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நவம்பர் 20-ந் தேதி அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ம.தி.மு.க. மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.