செய்திகள்

வடசேரியில் இன்று அதிகாலை குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து

வடசேரியில் இன்று அதிகாலை குடிசை வீட்டில் திடீர் தீ விபத்தில் பீரோ மற்றும் மின்சாதன பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி, காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பொன் சுடலை. அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நாகர்கோவில் நகராட்சியில் பொன் சுடலை துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. சற்று நேரத்தில் அது கொளுந்து விட்டு எரிந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் குடிசை வீடு முழுவதும் தீப்பரவியது.

இது பற்றி அக்கம்பக்கத்தினர் பொன் சுடலைக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி கல்யாணகுமார் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் குடிசை வீட்டில் பரவிய தீயை அணைத்தனர். என்றாலும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ மற்றும் மின்சாதன பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

இச்சம்பவம் பற்றி பொன் சுடலை வடசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின் கசிவு காரணமாக விபத்து நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.