கைது 
செய்திகள்

வடமதுரை அருகே சூதாடிய 4 பேர் கைது

வடமதுரை அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வடமதுரை:

வடமதுரை அருகே புத்தூர் பூசாரிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது பூசாரிபட்டி நாடகமேடை அருகே 4 பேர் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பூசாரிபட்டியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 28), ராஜேந்திரன் (30), கருப்பையா (27), ரவிக்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.