அவிநாசி:
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அவிநாசியில் நடந்தது. மாநில தலைவர் சுசீந்தரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆனந்தன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் சம்பந்தமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
மாநில கவுரவ தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் பங்கேற்று பேசினார்.
போதிய பயிற்சி, பணியிடங்கள், நவீன மென்பொருள் வசதி ஏற்படுத்த வேண்டும். தேவையான உட்கட்டமைப்பு வசதி மற்றும் போதிய கால அவகாசம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதல் கருவூல அலுவலர் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பதவி உயர்வு வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், காசாளர், கணக்கர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.