கைது 
செய்திகள்

வாத்தலை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

வாத்தலை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளிடம் டோல்கேட்:

வாத்தலை அருகே சுனைப்புகநல்லூர் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்காலில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக தனிப்படை பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மினி லாரியை நிறுத்தி வைத்து அதில் சிலர் மணல் மூட்டைகளை ஏற்றி கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது அங்கிருந்து அனைவரும் தப்பி ஓடினர். இதில் 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில், தனுஷ் (வயது 25), விஜய் (25) என்பதும், இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், மகேந்திரன், சிவகுமார், வெங்கடேஷ், ஞானம், கல்யாணசுந்தரம், ராம், பிரகாஷ் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமாக மினி லாரியில் மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனுஷ், விஜய் ஆகியோரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய 9 பேரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT