ஹரீஷ் ராவத் 
செய்திகள்

உத்தரகாண்ட் முன்னாள் முதல் மந்திரி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி

உத்தரகாண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹரீஷ் ராவத் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஹரீஷ் ராவத். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஹரீஷ் ராவத்துக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT