செய்திகள்

புனித தலத்தை பற்றி பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து: உத்தரகாண்டில் இருதரப்பினரிடையே வன்முறை

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் புனித தலத்தை பற்றி பேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் சர்ச்சைக்குரிய பதிவிட்டதை தொடர்ந்து, இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது.

டேராடூன்:

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவலை தொடர்ந்து பாதுரியா பகுதியில் கலவரம் ஏற்பட்டது. பின்னர் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது நிலைமை லேசாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தின் சூடு தணிவதற்குள் உத்தரகாண்ட் மாநிலம், கர்வால் மாவட்டத்தில் உள்ள சட்புலி நகரில் இதேபோன்று ஒரு வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சட்புலி நகரைச் சேர்ந்த இளைஞர்(மைனர்) ஒருவன் கேதர்நாத் புனித தலத்தை பற்றி சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது.

இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.