லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வரானதால், அத்தொகுதி காலியானது. புல்பூர் தொகுதி எம்.பி மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியும் காலியாக இருந்தது.
இந்நிலையில், இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்களர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க தனித்து களமிறங்கியுள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது. இதனால், இந்த தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.
மதியம் 3 மணிவரை கோரக்பூர் தொகுதியில் 30 சதவிகித வாக்குகளும், புல்பூர் தொகுதியில் 26 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட உள்ளன. #PhulpurByPoll #GorakhpurByPoll #LokSabhaByElection #TamilNews