கைது 
செய்திகள்

மது குடித்து வாகனம் ஓட்டிய தொழிலாளி கைது

ஊத்துக்கோட்டை அருகே மது குடித்து வாகனம் ஓட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஊத்துக்கோட்டை:

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பர். ஆனால் சில நாட்களுக்கு முன் கோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி இனி மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று மாலை ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் அண்ணாசிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மது அருந்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜங்காலபள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நஜீர் (27) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இது திருவள்ளூர் மாவட்டத்தில் எடுத்த முதல் கைது நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.