செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே உடல்நலக்குறைவால் மனம் உடைந்த பெண்தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்மம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லிஅம்மன்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பிராபகரன் (50). கூலி தொழிலாளி.

இவரது மனைவி கோவர்தனம் (45). இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டிருந்தார். பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வியாதி குணமாகவில்லை.

இதனால் மனம் உடைந்த கோவர்தனம் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார்.

ஆபத்தான நிலையில் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்தன் விசாரணை நடத்தி வருகிறார்.