ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கிரின்வேல்நத்தம் கிராமம் அருந்ததி காலனியை
சேர்ந்தவர் துரைசாமி (வயது 55) கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாட்டுக்கு புல் அறுக்க அதே பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்பருக்கு
சொந்தமான வயல் வெளிக்கு சென்றார். அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை கவனிக்காமல் துரைசாமி மிதித்து விட்டார். இதில் மின்சாரம்
தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பென்னாலுார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து துரைசாமியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.