செய்திகள்

சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் இணைந்தார் ராபின் உத்தப்பா

கர்நாடக மாநில சங்கத்திற்காக விளையாடிய ராபின் உத்தப்பா சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் இணைந்துள்ளார். புஜாரா, ஜடேஜாவுடன் இணைந்து விளையாட இருக்கிறார்.

மாலை மலர்

இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சவுராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தினர் மற்றும் ராபின் உத்தப்பா எடுத்து வந்தனர். சவுராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மாற தடையில்லா சான்றிதழ் கேட்டு கர்நாடக சங்கத்திற்கு விண்ணப்பித்திருந்தார் உத்தப்பா. மூத்த வீரரை இழக்க கார்நாடக கிரிக்கெட் சங்கம் விரும்ப விட்டாலும் சான்றிதழ் வழங்கியது.

இந்நிலையில் சவுராஷ்டிர கிரிக்கெட் சங்க மீடியா மானேஜர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘‘உத்தப்பா சவுராஷ்டிராவிற்கு மாற பிசிசிஐ-க்கு தேவையான அனைத்து நடைமுறையையும் இரண்டு கிரிக்கெட் சங்கமும் செய்துவிட்டது’’ என குறிப்பிட்டுள்ளது.