விவசாயி மீது தாக்குதல் 
செய்திகள்

உத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் விவசாயி மீது தாக்குதல்

உத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

தேனி:

உத்தமபாளையம் அருகே நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது38). இவரது சித்தப்பா தங்கம். இவர்களுக்கு இடையே தோட்டத்தில் மருந்து அடிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கலைச் செல்வன் தனது உறவினர் ராதாகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தார். தங்கம் தன்னைபற்றிதான் பேசுகிறார்கள் என நினைத்து கலைச்செல்வனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது தங்கத்தின் மனைவி அம்சவள்ளி, பாண்டிய ராஜன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து கலைச் செல்வனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கணேஷ் (30). இவரது உறவினர் பாஸ்கரன். இருவருக்கும் இடையே பிளக்ஸ் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாஸ்கரன் கணேசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.