விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக் கூடாது, புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், அரசு துறைகளை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் போராட்டக் குழுவினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.