செய்திகள்

உசிலம்பட்டி அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

உசிலம்பட்டி அருகே போதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர் சின்னன் மகன் முருகன் (வயது 35). மது பழக்கத்துக்கு அடிமையான இவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு அக்கம்பக்கத்தினருடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்று இரவு முருகன் மதுகுடித்து போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒருவீட்டின் முன்பு 90 வயது மூதாட்டி தூங்கி கொண்டிருந்தார்.

போதையில் தள்ளாடிய முருகன், திடீரென்று மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து மூதாட்டியின் பேத்தி உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் கீதாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித், வெற்றிமுருகன் ஆகியோர் தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்தனர்.